மன்னாரில் மாற்றுவலு சக்திக்காக மக்களைப் பணயம் வைக்கலாமா.. சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி
மன்னார் காற்றாலை விவகாரத்தில் அரசாங்கம் தனது பிடிவாதத்தைக் கைவிட்டு மக்களின் வாழ்வியல் உரிமையை உத்தரவாதப்படுத்த முன்வரவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"இலங்கையில் மாற்று வலுசக்தியை வலுப்படுத்துமுகமாக காற்றாலை மின்கோபுரங்கள், சூரிய சக்தி மின் ஆலைகள் என பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் குறிப்பாக மன்னார் தீவுப்பிரதேசத்தில் அப்பிரதேசம் சுற்றிவர கடலைக் கொண்டிருப்பதன் காரணமாக பாரிய காற்றாலைகளை அமைக்க அரசாங்கம் தனியார் துறைகளுக்கு ஊக்கமளித்து வருகின்றது.
அரசாங்கத்தின் மீது வெறுப்பு
மன்னார் மக்கள் இரண்டு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். ஒன்று கனியவளமிக்க மண் கொள்ளையிடப்படுகின்றது. மக்கள் செரிவாக வாழக்கூடிய பிரதேசங்களில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன.
மன்னார் தீவில் ஏற்கனவே முப்பதுக்கும் மேற்பட்ட மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றமையால் அதனுடைய இரைச்சல் ஒலி என்பது மக்களையும் மாணவர்களையும் வெகுவாக பாதித்து வருவதாக மக்கள் ஏற்கனவே முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.
மேலதிகமாக இன்னும் பல காற்றாலைகளை அமைக்க நிறுவனங்கள் முயற்சிப்பதானது மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மேல் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.





CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam
