மன்னார் காற்றாலை மின்சாரத் திட்டங்கள்: அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
மன்னாரிலிருந்து பூநகரிக்கு வடக்கே உள்ள பகுதி வெறும் பழமையான நிலம் என எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
மன்னாரில் காற்றாலை மின்சாரத் திட்டங்கள், பறவைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறப்படுவதை அவர் மறுத்துள்ளார்.
பழமையான நிலம்
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தப் பகுதி ஒரு பழமையான நிலம். நான் அந்தப் பகுதியைப் பார்வையிட்டேன்.
பறவைகளுக்கு ஆபத்து என்று கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. இந்த இடம், மன்னாரிலிருந்து பூநகரிக்கு வடக்கே உள்ள பகுதி வெறும் பழமையான நிலம்.
எனினும் சில பிரிவினர் மன்னாரை, காற்றாலைகளால் அழிக்கப்படும் ஒரு 'சொர்க்கம்' என்று சித்தரித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே சுற்றாடல் பாதுகாப்பு ஆர்வலர்கள் அமைச்சரின் கூற்றுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர். மன்னார் என்பது சர்வதேச பறவைகளின் வலசையின் போது ஒரு ஓய்விடமாகவும், இலங்கைக்குள் உள்நுழையும் வாயிலாகவும் இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பறவகைளின் வலசைக் காலம் இல்லாத நிலையில் அமைச்சர் அங்கு சென்றால் எந்தவொரு பறவையையும் காணக்கிடைக்காது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்தவகையில் யதார்த்தம் தெரியாமல் அமைச்சர் குமார ஜயகொடி கருத்து வெளியிட்டுள்ளதாக அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Ethirneechal: கருமாதி வீடாக மாறிய திருமண வீடு.. அறிவுக்கரிசி செய்த சம்பவம்- பதற்றத்தில் ஜனனி Manithan

மறைந்த ரோபோ ஷங்கர் குடும்பம் பட்ட கஷ்டம்.. மாதம் இவ்வளவு லட்சம் EMI கட்டவேண்டுமா? வெளிவந்த உண்மை Cineulagam
