மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத் திருவிழா ஆரம்பம்
மன்னார் அருள்மிகு திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷே நிகழ்வை முன்னிட்டு பூர்வாங்க கிரிகைகள் இன்று வியாழக்கிழமை (30) காலை 10.45 மணி அளவில் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு சிவ சிறி தியாகராஜா கருணானந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
கும்பாபிஷேகத்திற்கு வருகை தந்த சிவச்சாரியார்கள் மற்றும் தேவாரம் ஓதுபவர்கள் ,தர்மபுர ஆதி யினத்தினை சேர்ந்தவர்கள் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குருவால் மாலை அனுவிக்கப்பட்டு மங்கள வாத்தியத்துடன் வரவேற்கப்பட்டனர்.
ஆறாம் திகதி கும்பாபிஷேக பெருவிழா
அதனைத் தொடர்ந்து விநாயகர் வழிபாட்டுடன் கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டது. கிரிகைகளின் போது சாந்தி பூஜைகள் தர்மபுர ஆதீன முதல்வர் மீனாட்சி சுந்தரம் தம்பரான்,வேத சிவகாம பாடசாலை முதல்வர் சிவசிறி ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார் ஆகியோர் முன்னிலையில் இக் கிரியைகள் இடம் பெற்றது.
தொடர்ந்து எதிர்வரும் 5 நாட்கள் இக்கிரிகைககள் இடம்பெறும். எதிர்வரும் 3 ஆம்,4 ஆம் மற்றும் 5 ஆம் திகதிகளில் எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும்.
6 ஆம் திகதி வியாழக்கிழமை(06-07-2022) அன்று மஹா கும்பாபிஷேக பெருவிழா இடம்பெறவுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து வருகை தந்த பிரதம சிவாச்சாரியார்களின் தலைமையில் ஆரம்பமாகிய இந்த கும்பாபிஷேக திருவிழா ஓதுவார் மூர்த்திகளின் வேத மந்திர பாராயணங்களுடன் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
எதிர்வரும் ஜூலை 6 திகதி கௌரி அம்பாள் உடனுறை திருக்கேதீஸ்வரப் பெருமானுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் பூஜைகள் நடைபெற்று கருவறை இறைவனுக்கு எண்ணைக்காப்பு சாத்திரம் வைபவம் மிகவும் சிறப்பாக இடம்பெற உள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வெளியிடத்து பக்தர்கள்
வருகை
குறைவாக இருந்தாலும் கும்பாபிஷேக பூஜைகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று
வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
