மன்னாரில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி: பொலிஸாருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதி
மன்னார் - தலைமன்னாரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் (17.02.2024) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
48 மணித்தியால தடுப்பு காவல்
அதன்படி, சந்தேகநபரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த பொலிஸார் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமியொருவர் நேற்றைய தினம் (16.02.2024) சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் (17.02.2024) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த சிறுமி தகாத நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இஸ்ரேலுக்கு உதவியதால் அமெரிக்காவின் சேதமடைந்த ஏவுகணை அமைப்புக்கான செலவு ரூ 17,000 கோடி News Lankasri

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
