மன்னாரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞனை மடக்கி பிடித்த ஊர் மக்கள்
மன்னார் மூர்வீதி, குருசுக்கோவில் பகுதியில் உள்ள வீடுகளின் நீண்ட நாட்களாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞனை நேற்று மாலை அப்பகுதி இளைஞர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் திருட முற்பட்டும் போது அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபரை மடக்கி பிடித்து கட்டி வைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, இப் பகுதியில் உள்ள வீடுகளில் தொடர்ச்சியாக கோழிகள் திருட்டுப் போவதுடன், வீடுகளில் உள்ள துவிச்சக்கர வண்டிகள் உட்பட பெறுமதியான பொருட்கள் நாளாந்தம் திருட்டு போவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சந்தேக நபரை மடக்கி பிடித்த ஊர் மக்கள் பொலிஸ் அவசர தொலைபேசிக்கு (119) தொடர்பை ஏற்படுத்தி குறித்த சந்தே நபரை மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை மன்னார் பொலிஸார் கைது செய்தாலும் உடனடியாக விடுவித்து விடுவதாகவும் பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த பகுதியில் இரவு பகல் பாராது சந்தேக நபர் மற்றும் அவரது குழுவினர் திருட்டில் ஈடுபட்டு வருகின்ற போதும், சந்தேக நபரை பொலிஸார் தடுப்பு காவலில் வைக்காது விடுவிப்பதாகவும் பிரதேச மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.