மன்னார் - நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரி அம்மன் ஆலய தேர்த் திருவிழா
மன்னார் - நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
தேர்த் திருவிழாவிற்கான விசேட பூஜைகள் நிறைவு பெற்ற பின் இன்று(18) காலை 10.30 மணியளவில் அம்பாள் தேரேறி வீதி உலா வருகை தந்துள்ளார்.
தேர்த் திருவிழா
இன்றைய தேர்த் திருவிழாவின் சிறப்பு நிகழ்வாக கட்டைக்காடு தீவுப் பிட்டி பகுதியில் இருந்து செதில் காவடிகள் பறவைக் காவடிகள் நேர்த்திக் கடனாக எடுத்து வரப்பட்டுள்ளன.
மேலும், தேர்த் திருவிழாவில் நானாட்டான் பிரதேசத்தில் பல கிராமங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த 5ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலய மஹோற்சவத்தில் வசந்தோற்சவம் மஞ்சம் சப்பரம் என சிறப்புத் திருவிழாக்கள் நடை பெற்றுள்ளன.
நாளைய தினம் (19) தீர்த்தம் மற்றும் தீ மிதிப்பு திருவிழாவுடன் இந்த வருடத்திற்கான மகோற்சவ திருவிழா நிறைவு பெற உள்ளது. இந்த திருவிழா நிகழ்வுகள் அனைத்தையும் ஆலய பரிபாலனசபையினர் மிகவும் சிறப்பாக செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
