மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா பாதயாத்திரை
மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழாவை முன்னிட்டு, நேற்றிரவு யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மணல்காடு அந்தோனியார் தேவாலயத்திலிருந்து பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மணல்காடு அந்தோனியார் தேவாலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பாத யாத்திரையில் வடமராட்சியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், மணல்காடு பங்கு மக்களுமாக சுமார் 150பேர் வரை இப்பாதயாத்திரையில் இணைந்திருந்தனர்.
ஆவணி மாத திருவிழா
இரவிரவாக பாத யாத்திரை சென்ற மக்களுடன் செம்பியன்பற்று பங்கு மக்களும் இணைந்துகொண்டு இயக்கச்சி சவேரியார் ஆலயத்தில் பாதயாத்திரையை நிறைவுசெய்து அங்கிருந்து இன்று பிற்பகல் இரண்டாம் நாள் பாதயாத்திரையை தொடரவுள்ளனர்.
இதேவேளை கட்டைக்காடு பங்கிலிருந்தும் கிறிஸ்தவ மக்கள் மருதமடு அன்னையின் ஆவணிமாத பெருந்திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரையை நள்ளிரவில் ஆரம்பித்து இயக்கச்சி சவேரியார் ஆலயத்தை சென்றடைந்து மணல்காட்டிலிருந்து சென்றவர்களும் இணைந்தே இன்றைய நாள் பாதயாத்திரை இடம்பெறவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



நல்லூர் கந்தசுவாமி கோவில் 15 ஆம் நாள் திருவிழா





கிளைமேக்ஸ் மற்றும் அந்த 20 நிமிடம், ரஜினியின் கூலி படம் பற்றி வந்த முதல் விமர்சனம்... மாஸ் போங்க Cineulagam

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam
