மன்னார் மாந்தை மேற்கு கிராம உத்தியோகத்தர் கொலை! சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிப்பு
மன்னார் – மாந்தை மேற்கில் கிராம உத்தியோகத்தரின் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தொடர்ந்தும் எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மன்னார் நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் சந்தேகநபர் இன்று புதன் கிழமை ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சந்தேகநபர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொலை சம்பவம் தொடர்பான விசாரணை குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் இன்று மேலதிக அறிக்கை மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான இரசாயன பகுப்பாய்வு அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை எனவும் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேக நபர் தொடர்பான சட்ட மருத்துவ அறிக்கை, நீதிமன்றத்திற்கு நேரடியாக சமர்ப்பிக்கப்படும் என சிறைச்சாலைகள் அதிகாரிகள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri