மன்னார் மடுமாதா ஆலய ஆடி திருவிழா: ஆயர் தலைமையில் விசேட கலந்துரையாடல் (Photos)
மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடல் மன்னார் மடு திருத்தலத்தில் இன்றையதினம் (27.06.2023) இடம்பெற்றது.
கடந்த (23.06.2023) ஆம் திகதி கொடியேற்றத்துடன் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா ஆரம்பமானது.
தொடர்ந்து நவநாள் திருப்பலி தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒப்புக் கொடுக்கப்பட்டு வருகிறது.
அத்தியாவசிய வசதிகள் குறித்த ஏற்பாடு
எதிர்வரும் (02-07-2023) ஆம் திகதி காலை 6.15 மணிக்கு மறைமாவட்ட ஆயர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை ஒப்புக் கொடுக்க உள்ளனர்.
குறிப்பாக குடி நீர், போக்குவரத்து, சுகாதாரம்,வைத்திய உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
இம்முறை நாட்டின் பலபாகங்களில் இருந்தும் பெருமளவிலான மக்கள் மரு அன்னையின் ஆசிபெற வருகைதர உள்ளமையினால் சகலவிதமான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமேல், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார், மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் அதிகாரிகள் உற்பட இராணுவம், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் திணைக்கள அதிகாரிகள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |














தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam
