தலைமன்னார் பிரதான வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்த அருட்தந்தை
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மன்னார் மறைமாவட்ட அருட் பணியாளரும் மன்னார் மடு மாதா சிறிய குருமடத்தின் உதவி இயக்குனருமான அருட்தந்தை கே.ஜொனார்த்தனன் அடிகளார் (வயது 31) உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்று (07.07.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் விபத்து
தலைமன்னார் ஆலயத்தில் மாலை நேர திருப்பலியை ஒப்புக் கொடுத்த நிலையில் மீண்டும் தலை மன்னாரில் இருந்து மன்னார் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது மாலை 6.50 மணியளவில் கட்டுக்காரன் குடியிருப்பு பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதன் போது படுகாயமடைந்த அருட்தந்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சடலம் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri