பெரியபண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் தயார்நிலையில்
மன்னார் - மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம், மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக முழுமையாகத் தயார்படுத்தப்பட்டுள்ளது.
சுடரேற்றுவதற்கான ஏற்பாடுகள்
இன்றைய தினம் (27) மாவீரர் தினத்தை முன்னிட்டு, துயிலுமில்ல வளாகத்தைச் சுத்தப்படுத்தி, அலங்கரிக்கும் பணிகள் துயிலுமில்ல பணிக் குழுவினர், பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்புடன் மிக நேர்த்தியாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வளாகம் எங்கும் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக் கொடிகள் பறக்கவிடப்பட்டு, நினைவேந்தல் சுடரேற்றுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
கடந்த காலங்களை போன்றே இம்முறையும் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்துவதற்கு தேவையான சகல அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.



