மன்னார் - மடு திருவிழா தொடர்பில் விசேட அறிவித்தல்(Video)
மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில் இம்முறை நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மேலும், வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்திக் கொண்டு
சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முன் ஆயத்த நடவடிக்கை
மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பாகவும் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயும் 2 ஆவது கூட்டம் இன்றைய தினம் (09.08.2023) காலை 11 மணியளவில் மடு திருத்தல மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது எதிர்வரும் ஆவணி மாதம் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற உள்ள மடு திருவிழா தொடர்பாகவும் முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
