மன்னாரில் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு
மன்னார் மாவட்டத்தில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் கடும் கெடுபிடிகளின் மத்தியில் சுடர் ஏற்றி தாயக விடுதலைக்காக மரணித்தவர்களுக்கு நினைவேந்தல் செலுத்தப்பட்டுள்ளது.
இன்று (27) காலை தொடக்கம் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் மாவீரர் தினத்தை கட்டுப்படுத்தும் வகையில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில் தமிழர் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ் சிவகரன் தலைமையில் மாவீரர்களுக்கான நினைவு அஞ்சலி இன்று மாலை 6.15 மணி அளவில் இடம் பெற்றது.
இதன் போது அருட்தந்தை ஜெயபாலன் அடிகளார், மன்னார் நகர சபை தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், மன்னார் நகரசபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் உட்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.




Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri