மன்னார் கூட்டு எதிர்ப்பு அரசாங்கத்திற்கு பலமான செய்தி! நாமல் ராஜபக்ச
மன்னார் காற்றாலை மற்றும் மணல் அகழ்வுத் திட்டங்களுக்கு எதிராக மக்கள் வெளிப்படுத்தும் கூட்டு எதிர்ப்பு, அரசாங்கத்திற்கு பலமான செய்தி என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமது எக்ஸ் தளத்தில் இதனை குறிப்பிட்டுள்ள அவர், திட்டங்களை முன்னெடுக்கும் முன் மக்கள், பிரதிநிதிகள் மற்றும் மதகுருமார்களுடன் கலந்துரையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி
ஜனாதிபதியின் செயலாளரால் இவ்வாணையைப் புறக்கணித்துச் செயற்பட வழங்கப்பட்ட உத்தரவு, மக்களின் விருப்பத்தை நேரடியாக மீறுவதாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அமைதியான போராட்டக்காரர்களை பொலிஸார் துன்புறுத்தியது கண்டிக்கத்தக்கது என்றும் நாமல் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் உடனடியாக மக்களுடன் நேரடி தொடர்பில் இருந்து, திட்டங்கள் குறித்த உண்மையான தகவல்களை வழங்க வேண்டும் என்றும், தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) எதிர்க்கட்சியில் இருந்தபோது வெளிநாட்டு முதலீடுகளை விரட்டினர். எனினும், தற்போது ஆட்சியிலிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தியை ஆதரிப்பதாகவும், ஆனால் அது மக்களைத் துன்புறுத்தும் வகையில் இருக்கக்கூடாது என்று நாமல் வலியுறுத்தினார்.



