மன்னார் மனித புதைகுழி விவகாரம்- எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம் (Video)
மன்னார் 'சதோச' மனித புதைகுழி அகழ்வு தொடர்பான, விசாரணை அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்கான கட்டளை உருவாக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று புதன்கிழமை(05.07.2023) மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கு B/232, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஏற்கனவே அழைக்கப்பட்ட 27 திணைக்களத்தின் பிரதிநிதிகள் சார்பில் பலர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.
அத்துடன் அரச தரப்பு சட்டத்தரணி, விசேட சட்ட வைத்திய அதிகாரி (ஜே.எம்.ஓ), பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள், ஓ.எம்.பி அலுவலக சட்டத்தரணிகள், இராணுவ சட்டத்தரணிகள் போன்ற பலர் பிரசன்னமாகி இருந்தனர்.
நீதிமன்ற தீர்மானம்
இந்நிலையில் நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட வினாக்களுக்கு அமைவாக சதோச மனித புதை குழியில் ஏற்கனவே 376 மனித எச்சங்கள் எடுக்கப்பட்டதாகவும் அதனை மீண்டும் அகழ்ந்து மிகுதி மனித எச்சங்களை உடனடியாக எடுப்பதற்கான தேவை இல்லை, என ஒட்டுமொத்த தரப்பினரின் இணக்கப்பாட்டுக்கு அமைவாக தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் தற்போது இந்த மனிதப் புதைகுழியின் மனித எச்சங்கள் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஆனால் காணாமல் போன தரப்பில் ஒட்டுமொத்த அறிக்கை(compression report) என்ற அடிப்படையிலும் இதுவரையில் நடந்தது என்ன? இனி தொடர்ந்து என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது? அவற்றை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும்? போன்ற விளக்கங்களை சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ச நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதுஎன அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த வழக்கு செப்டம்பர் மாதம் 12,13-ம் திகதிகளில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி! வாயடைத்துப்போன ரசிகர்கள் Manithan

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
