அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம் - மன்னார் கடற்றொழிலாளர்கள்
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைகின்ற கடற்றொழிலாளர்களைக் கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உறுதுணையான இருப்போம் என மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாச தலைவர் நூர் மொஹமட் ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று(31) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“இந்தியா ஒரு வல்லரசு நாடு என்று கூறிக்கொண்டு, சந்திர மண்டலத்திற்கும், செவ்வாய்க்கிரகத்திற்கும் விண்கலங்களை அனுப்புகின்றனர்.
கடல் எல்லை
எனினும், அவர்களின் நாட்டு கடற்றொழிலாளர்கள் இலங்கை கடல் எல்லையை தாண்டுகின்ற போது உயிரிழப்புக்களையும் சந்திக்கின்றார்கள். கடற்படையினரால் கைதும் செய்யப்படுகின்றனர்.
இலங்கை அரசாங்கத்திடம் எவ்வித தொழில்நுட்பமும் இல்லாமல் கடல் எல்லை பாதுகாக்கப்படுகின்றது. எனவே, தமது நாட்டின் எல்லையை பாதுகாக்க இந்தியாவினால் இயலாதா?
தமது நாட்டு கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படுகின்றார்கள் என கூறும் இந்திய அரசு தமது கடற்றொழிலாளர்களை பாதுகாக்க அவர்களே முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமது நாட்டு எல்லையையும் பாதுகாக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |