மன்னாரில் கடும் காற்றினால் 16 குடும்பங்கள் பாதிப்பு

Family Mannar House Fisherman Disaster Management
By Ashik May 26, 2021 09:50 AM GMT
Report

மன்னார் மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட கடும் காற்றின் காரணமாக 16 குடும்பங்களைச் சேர்ந்த 59 பேர் பாதிப்படைந்துள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் கனகரட்ணம் திலீபன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,   

மன்னார் மாவட்டத்தில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 59 பேர் நேற்று ஏற்பட்ட கடும் காற்று காரணமாக பாதிப்படைந்துள்ளனர். 

மேலும், மாவட்டத்தில் 13 வீடுகள் பௌதீக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 2 சிறிய கடைகளும் சேதமடைந்துள்ளது. 

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 5 வீடுகளும், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 5 வீடுகளும், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் 2 வீடுகளும், மடு பிரதேச செயலாளர் பிரிவில் வீடொன்றும் சேதமடைந்துள்ளது. 

மேலும் மன்னார் எருக்கலம்பிட்டியில் ஒரு கடையும்,கொக்குப்படையான் கிராமத்தில் ஒரு கடையும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரியமடு கிராமத்தில் 3 ஏக்கர் பப்பாசிச் செய்கையும், தேவன் பிட்டி, வெள்ளாங்குளம் பகுதியில் 5 ஏக்கர் வாழைத்தோட்டமும் குறித்த காற்றினால் முழுமையாக சேதமடைந்துள்ளது. 

மேலதிக நடவடிக்கைகளை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேற்கொண்டு வருகின்றது என அவர் தெரிவித்தார். 

மன்னார் மாவட்டத்தில் உள்ள பல மீனவக் கிராமங்களுக்குள் கடல் நீரு் சென்றுள்ளதுடன், கடற்கரையில் கட்டி வைக்கப்பட்ட படகுகளும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உள்ளது, அதனுடன் மீனவர்களின் மீன் வாடிகளும் சேதமாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

  


GalleryGalleryGalleryGalleryGallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US