மயங்கி விழுந்த இளம் குடும்பஸ்தர் மரணம்
மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் இலுப்பைக்கடவை படகுதுறை பகுதியில் நேற்று மாலை 34 வயதுடைய நபரொருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
குறித்த குடும்பஸ்தர் இலுப்பைக்கடவை படகு துறை கடற்கரை பகுதியில் மீன்வலை சுத்தம் செய்து கொண்டிருந்த போதே திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இந்த நிலையில் அவரை நோயாளர் காவு வண்டி ஊடாக பள்ளமடு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் இலுப்பைக்கடவை பகுதியை சேர்ந்த வினோதன் (34 வயது) என தெரியவந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த குடும்பஸ்தரின் திடீர் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.