மன்னாரில் இதுவரை பாதிக்கப்பட்டோர் தொடர்பில் வெளியான தகவல்
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 24 ஆயிரத்து 313 குடும்பங்களைச் சேர்ந்த 79 ஆயிரத்து 946 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். -
அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட சீரற்ற காலநிலை படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு மாறி வருகிறது.
மீட்கும் நடவடிக்கைகள் தாமதம்
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 24 ஆயிரத்து 313 குடும்பங்களைச் சேர்ந்த 79 ஆயிரத்து 946 நபர்கள் குறித்த அசாதாரண காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 87 முகாம்களில் 11 ஆயிரத்து 230 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்து 505 நபர்கள் தங்கள் வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மன்னார் மாவட்டத்தில் இயல்பான வானிலை காணப்பட்டாலும் மன்னார் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் வடிய ஆரம்பித்துள்ளது.
மன்னார் மாவட்டத்தை இணைக்கும் இரண்டு வீதிகளும் துண்டிக்கப்பட்டு ஏனைய மாவட்டங்களுடன் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூராய் பகுதியில் உள்ள குளம் பெருக்கெடுத்ததன் காரணமாக 40 நபர்கள் மரங்களிலும் உயர்ந்த கட்டடங்களிலும் தஞ்சமடைந்த நிலையில் நீர் மட்டம் குறைந்த நிலையில் அவர்கள் அப்பகுதியில் உள்ள மண் திட்டியில் தஞ்சமடைந்துள்ளனர்.
எனினும் சீரற்ற காலநிலை காரணமாக அவர்களை மீட்கும் நடவடிக்கை தாமதித்து உள்ளது.அவர்களுக்கான உணவு வழங்கும் நடவடிக்கைகள் கடற்படை ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஏனைய பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உணவு மற்றும் மீட்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூழ்கிய ரோலர்கள்
இதேவேளை மன்னாரில் புயலால் ஏற்பட்ட தாக்கம் சற்று தனிந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் மற்றும் வெள்ள நிவாரண பணிகள் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் புயலில் இருந்து பாதுகாப்புக்காக மன்னார் பிரதான பாலம் மற்றும் கோந்தை பிட்டி கடற்கரை பகுதிகளில் தரித்து வைக்கப்பட்ட ரோலர் மீன்பிடி படகுகள் நீரில் மூழ்கியுள்ளன.
குறித்த படகுகளை மீட்கும் பணியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மூழ்கிய ரோலர்கள் பல இலட்சம் பெறுமதியானவை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இலங்கையில் காணப்படுகின்ற காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட மன்னார் கட்டையடம்பன், இசை மழை தாழ்வு, முருங்கன் உள்ளிட்ட கிராம மக்களுக்கான ஒரு தொகுதி நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.







உன்னை கொன்றுவிடுவேன்... கடும் கோபத்தில் சரவணன்.. வெளிவந்த உண்மை! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ வீடியோ Cineulagam