மன்னார் மாவட்ட நலன்புரி நன்மைகள் பயனாளிகளுக்கு அரச அதிபரின் முக்கிய அறிவிப்பு!
மன்னார் மாவட்டத்தில் நலன்புரி நன்மைகள் சபையின் கொடுப்பனவை பெற்றுக்கொள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் உடனடியாக வங்கி கணக்கை ஆரம்பிக்குமாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமேல் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் நலன்புரி நன்மைகள் சபையின் கொடுப்பனவை பெற்றுக்கொள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் இன்று முதல் (29.07.2023) எதிர் வரும் 01.08.2023 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) வரை வங்கி கணக்குகளை திறக்க முடியும்.
விசேடமாக திறக்கப்படும் வங்கிகள்
நாளை (30.07.2023) ஞாயிறு மற்றும் 1 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விடுமுறையாக உள்ள போதும்
மேலும், கொடுப்பனவை பெற்றுக்கொள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் இலங்கை வங்கி,மக்கள் வங்கி,தேசிய சேமிப்பு வங்கி,பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகிய வங்கிகளில் கணக்குகளை ஆரம்பிக்க முடியும்.
எனவே தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் குறித்த வங்கிகளில் ஏதாவது ஒரு வங்கியில் தமது வங்கி கணக்கை திறந்து சமர்ப்பிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
