துப்பாக்கிச்சூட்டில் பாதாள உலகக்குழு தலைவர் உட்பட இருவர் பலியான விவகாரம்: மனைவி வாக்குமூலம்
பாதாள உலகக்குழு உறுப்பினர் தொன் ரொஷான் இந்திக்க எனப்படும் "மன்னா ரொஷான்" மற்றும் அவரது உதவியாளர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதுக்கை துந்தான, வெந்தேசிவத்த பிரதேசத்தில் வைத்து நேற்று முன்தினம் (25.12.2023) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.
டுபாயில் இருந்து இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுவின் தலைவரான லலித் கன்னங்கரா என்பவரின் நேரடி தலையீட்டில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மனைவி வாக்குமூலம்
மன்னா ரொஷான் கொலை செய்யப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் லலித் கன்னங்கரா அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் லலித் கன்னங்கரா, போதைப்பொருள் வழங்குவதாக தெரிவித்தமைக்கு இணங்க, மன்னா ரொஷான் தமது உதவியாளருடன் துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற பகுதிக்கு சென்றதாக அவரது மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
