பலத்த பாதுகாப்புடன் டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்படும் பாதாள உலகக்கும்பல் தலைவர்
டுபாயில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நாட்டின் முன்னணி பாதாள உலகக் கும்பல் தலைவர்களில் ஒருவராகவும் போதைப்பொருள் வியாபாரியாகவும் கருதப்படும் மன்னா ரமேஷ் மற்றும் அவரது சீடர்கள் மூவரும் இன்று (7) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
இந்த நான்கு பாதாள உலக நபர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் குழுவொன்று நேற்று டுபாய் சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இரகசியப் பொலிஸாருக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் நடவடிக்கையின் கீழ் விசேட இரகசிய பொலிஸ் குழு டுபாய் நோக்கிப் புறப்பட்டுள்ளது.

சிவப்பு அறிவிப்பு
பாதாள உலகக் குழுத் தலைவனாகக் கருதப்படும் மன்னா ரமேஷ் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் காரில் பயணித்தபோது உள்ளூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அவரது சீடர்கள் மூவரையும் உள்ளூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிவப்பு அறிவிப்பு அனுப்பப்பட்ட நாற்பத்து மூன்று பேர் பட்டியலில் மன்னா ரமேஷும் இருப்பதாக கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam