மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் - ஏகமனதாக நிறைவேற்றம்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக இன்றைய தினம் நிறைவேற்றப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 45 வது அமர்வு வியாழக்கிழமை (11) களுதாவளையில் அமைந்துள்ள பிரதேச சபையின் சபா மண்டபத்தில் தவிசாளர் ஞானமுத்து யோகநாதனின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது எதிர்வருகின்ற 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை தவிசாளர் சமர்ப்பித்தார். சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் தொடர்பில் சபை உறுப்பினர்களால் கருத்துக்கள் பரிமாறப்பட்டு, வாதப்பிரதி வாதங்களும் ஏற்பட்டிருந்தன.
இந்நிலையில் பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் அமைந்துள்ள பொது மைதானங்கள், மற்றும் மாயானங்களுக்குரிய குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதி ஆகியவற்றை இந்த பாதீட்டில் உள்ளடக்குமாறும், அவ்வாறு இதனை உள்ளடக்காவிட்டால் தான் இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும், களுவாஞ்சிகுடி வட்டார உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்தார்.
இந்நிலையில் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்த விடயங்கள், சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் பொதுப்பயன்பாடு என்ற விடயத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சபையின் பிரதித் தவிசாளர் திருமதி.கறஞ்சினி தெரிவித்ததையடுத்து சபையில் அனைத்து உறுப்பினர்களினாலும் ஏகமனதாக 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு இதன்போது நிறைவேற்றப்பட்டது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞானமுத்து யோகநாதன் இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
எமது பிரதேச சபையில் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை நான் இன்றய தினம் முன்வைத்தேன். அதற்கு எமது சபையின் பிரதித் தவிசாளர், மற்றும் ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்து ஆதரவு தெரிவித்து 5 வது தடவையாகவும் வெற்றிபெறச் செய்துள்ளார்கள். இது எமது பிரதேச சபையினதும், பிரதேசத்தினதும் ஒன்றுமையைக் காட்டி நிற்கின்றது, ஒத்துழைப்புத் தந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என இதன்போது அவர் கருத்துத் தெரிவித்தார்.
வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்ட இன்றய சபை அமர்வை பார்வையிடுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் வருகை தந்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.



எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri