இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 92ஆவது வயதில் இன்று(26.12.2024) காலமானார்.
எய்ம்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் சிங் இன்று மாலை உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையிலலேயே அவர் காலமானதாக மருத்துவமனை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மன்மோகன் சிங், செப்டம்பர் 26, 1932 இல், மேற்கு பஞ்சாபின் காஹ் கிராமத்தில் பிறந்துள்ளார்.
பல முக்கிய பதவிகள்
சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் அவர் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
VIDEO | Congress leader Priyanka Gandhi Vadra reaches Delhi AIIMS where former PM Dr Manmohan Singh was admitted earlier today. pic.twitter.com/jFtLI0Oiav
— Press Trust of India (@PTI_News) December 26, 2024
மேலும், இவர் மே 22, 2004 முதல் மே 26, 2014 வரை மொத்தமாக 3,656 நாட்களுக்கு இந்தியப் பிரதமராகப் பணியாற்றினார்.
ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தியைத் தொடர்ந்து இந்திய வரலாற்றில் மிக நீண்ட காலம் பதவி வகித்த மூன்றாவது பிரதமராக மன்மோகன் சிங் உள்ளார்.
India mourns the loss of one of its most distinguished leaders, Dr. Manmohan Singh Ji. Rising from humble origins, he rose to become a respected economist. He served in various government positions as well, including as Finance Minister, leaving a strong imprint on our economic… pic.twitter.com/clW00Yv6oP
— Narendra Modi (@narendramodi) December 26, 2024
அவரது அரசியல் பிரவேசத்திற்கு முன், 1971இல் வெளிநாட்டு வர்த்தக அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர், 1976இல் நிதி அமைச்சகத்தில் தலைமை பொருளாதார ஆலோசகர், இந்திய ரிசர்வ் வங்கியின் இயக்குநர், ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் சர்வதேச மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி ஆகியவற்றில் இந்தியாவிற்கான மாற்று ஆளுநர் மற்றும் அணுசக்தி மற்றும் விண்வெளி ஆணையங்களில் உறுப்பினர் (நிதி) உட்பட பல முக்கியப் பதவிகளை வகித்திருந்ததார்.
இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி உட்பட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலதிக தகவல் - சிவா மயூரி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |