மிக்ஸ் பாக்சின்கில் இந்தியாவில் தங்கம் வென்ற மாங்குளம் பெண்ணிற்கு கிடைத்த கௌரவம் (Photos)
இந்தியாவில் நடைபெற்ற மிக்ஸ் பாக்சின்கில் தற்காப்பு கலை போட்டியில் தங்கம் வென்ற மாங்குளத்தை சேர்ந்த ஜெகதீஸ்வரன் விஜிதாவிற்கு கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டிற்கு நேற்றைய தினம்(20) வருகை தந்திருந்த நிலையில் அவருக்கு மாங்குளம் மண்ணில் பெரும் கௌரவிப்பு நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றிருந்தது.
கிடைத்த கௌரவிப்பு

மாங்குளம் பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து கௌரவிப்பு நிகழ்வு ஆரம்பமாகி மாங்குளம் சந்தி வரை வீதி ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட விஜிதா பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களும் மற்றும் கழக வீரர்கள், மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இப் போட்டியானது கடந்த 27ஆம் திகதி இந்தியாவில் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்தார் பாருங்க.. புகைப்படம் இதோ Cineulagam