யாழில் குழந்தைக்கு உணவு கேட்ட தந்தைக்கு ஆதரவாக களமிறங்கிய மணிவண்ணன்
யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி வடக்கு பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் கடந்த முதலாம் திகதி அன்று கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களுக்கும் இன்று (04) பருத்தித்துறை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
கடந்த 01ஆம் திகதி (01.12.2024) அன்று கைது செய்யப்பட்டு 2ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக்கப்பட்ட நிலையில் இன்றுவரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.
பிள்ளைகளுக்காக உணவு கோரிய வேளை
எனினும், இன்று மீண்டும் வழக்கு இடம்பெற்ற நிலையில் குறித்த வழக்கிற்கு சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையிலான சட்டத்தரணிகள் மன்றிற்கு முன்வைத்த விவாதத்தின் அடிப்படையில் குறித்த இரண்டு சந்தேக நபர்களுக்கும் பருத்தித்துறை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
கடந்த மாதம் 30ஆம் திகதி கற்கோவளம் பகுதியில் கிராம சேவகரிடம் பிள்ளைகளுக்காக உணவு கோரியவேளை ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே, குறித்த கிராமசேவகர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையிலேயே இந்த வழக்கு இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செய்திகள்யாழில் கிராம அலுவலகருடன் முரண்பட்ட இருவருக்கு விளக்கமறியல் உத்தரவு..! |
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |