ஹிருணிகா தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா மீது சுமத்தப்பட்டிருந்த அவமதிப்பு வழக்கிலிருந்து, அவரை நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தி ஹிருணிகாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை, மேன்முறையீட்டு நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.
இந்தநிலையிலேயே குறித்த குற்றச்சாட்டுக்களில் இருந்து ஹிருணிகாவை விடுவிப்பதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நீதிமன்றம் உத்தரவு
கல்கிஸ்ஸ நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பாக, ஊடகவியலாளர் சந்திப்பில் ஹிருணிகா தெரிவித்த கூற்றுக்கு எதிராகவே இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

எனினும் இது போன்ற கருத்துக்களை எதிர்வரும் காலங்களில் வெளியிடப் போவதில்லை என ஹிருணிகா பிரேமச்சந்திர தனது சட்டத்தரணி ஊடாக உறுதியளித்ததை அடுத்து, நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri