அநுர அரசில் அதிரடி நடவடிக்கை - பிரபல மதுபான நிறுவனத்திற்கு தடை
அநுர அரசாங்கத்தின் கீழ் வரி ஏய்ப்பு செய்த பாரிய நிறுவனம் ஒன்றுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 5.7 பில்லியன் ரூபா வரி மற்றும் மேலதிக கட்டணங்களை செலுத்த தவறியதன் காரணமாக W.M.மெண்டிஸ் நிறுவனத்தின் உற்பத்தி உரிமம் பறிக்கப்படவுள்ளது.
குறித்த நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமத்தை நாளை முதல் இடைநிறுத்துமாறு கலால் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.
மதுபான உற்பத்தி
மேலும், மதுபான உற்பத்தி செயல்முறையை நாளை (05.12.2024) முதல் இடைநிறுத்துமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வரி மற்றும் கூடுதல் கட்டணம் செலுத்தப்படாவிட்டால், நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து கலால் மதுபான உரிமங்களும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் நீட்டிக்கப்படாது என்றும் கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
சன் டிவி சீரியலில் நாயகனாக நடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகர்... யார், என்ன தொடர், முழு விவரம் Cineulagam
நடிகர் ஜீவாவின் தந்தை, தயாரிப்பாளர் RB சவுத்ரி விபத்தில் மரணம்! அதிர்ச்சியில் சினிமா துறை Cineulagam