கோட்டாபயவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலே மணிவண்ணன்! சுகாஷ் பகீர்த் தகவல்
கோட்டாபய ராஜபக்ஷவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே ஈ.பி.டி.பி.யின் துணையுடன் தோழர் மணிவண்ணன் யாழ்.மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்..
யாழில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
குறித்த ஊடக சந்திப்பில் சுகாஷ் மேலும் கூறியுள்ளதாவது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவும் தலைமையும் எடுத்த முடிவு சரியென்பதை வெகு சீக்கிரத்தில் காலம் காட்டியுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து கொள்கை ரீதியாக நீக்கப்பட்ட முன்னாள் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன், தமிழ் தேச விரோத சக்திகளான ஈ.பி.டி.பி.கட்சியோடு சேர்ந்து யாழ்ப்பாண மாநகர சபையினுடைய மேயர் பதவியை கைப்பற்றி இருக்கிறார்.
அதற்கு கட்சியினுடைய கட்டுப்பாட்டை மீறி ஆதரவு வழங்கி, யாழ்.மாநகர சபையில் ஆதரவு வழங்கிய 6 உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மிகவும் விரைவில் எடுக்கப்படும் என மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam