சஜித் அணியினரின் அழைப்பை நிராகரித்தார் மங்கள
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்வது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர நிராகரித்துள்ளதாக தெரியவருகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்வதற்கு மங்கள சமரவீர ஆர்வம் கொண்டிருப்பாரேயானால், அது குறித்து கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் கலந்துரையாடத் தயாராக இருப்பதாக அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் ரெஹான் ஜயவிக்ரம தெரிவித்திருந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் மங்கள சமரவீர அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு மறுப்பு வெளியிட்டிருக்கின்றார்.
This title is a bit misleading Asitha. Im quite confident that it should be corrected to " The invitation extended by SJB member Rehan Jayawickreme to join the @sjbsrilanka has been regretted by @MangalaLK?? https://t.co/xhnvFW0kY7
— Rehaan Jayawickreme(RJ)රෙහාන් ජයවික්රම (@RehanJayawick) July 28, 2021

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
