தடுப்பூசியின் இரு டோஸையும் பெற்ற மங்கள சமரவீரவின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து வெளியான தகவல்
கோவிட் தொற்று காரணமாக நேற்றைய தினம் காலமான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் உயிரிழப்பிற்கான காரணம் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கோவிட் தொற்றினால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்ததாக கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்றைய தினம் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்களை சுட்டிக்காட்டி சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் மங்கள சமரவீர நீண்ட காலமாக நீரிழிவு மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், அவர் ஃபைசர் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய முக்கிய செய்திகள்...
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்
பொரள்ளை பொது மயானத்தில் இடம்பெற்ற மங்களவின் இறுதிக்கிரியைகள்
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri