பொரள்ளை பொது மயானத்தில் இடம்பெற்ற மங்களவின் இறுதிக்கிரியைகள்
புதிய இணைப்பு
உயிரிழந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இறுதி கிரியைகள் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.
கொரோனா தொற்றுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை முன்னாள் அமைச்சர் உயிரிழந்தார்.
பொரள்ளை பொது மயானாத்தில் அவரது இறுதிக் கிரியைகள் இடம்பெற்றுள்ளது.
மேலும், மயானத்தின் உள்ளே மக்கள் அதிகம் எனக் கூறி எவரையும் அனுமதிக்கவில்லை எனவும், இறுதிக்கிரியைகளின்போது மங்கள சமரவீரவின் சகோதரி மற்றும் சகோதரியின் மகள் ஆகியோர் உடன் இருந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், ஹர்ஷ டி சில்வா உள்ளிட்டோர் இருப்பதாக அறிய முடிகின்றது.
முதல் இணைப்பு
கொரோனா தொற்றுக்கு இலக்காகி இன்று காலை மரணமான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இறுதி கிரியைகள் இன்று மாலை இடம்பெறவுள்ளது.
பொரளை மயானத்தில் இறுதி கிரியைகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
65 வயதான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொரோனா தொற்றுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்திருந்தார்.
அவரது மறைவினைத் தொடர்ந்து சிரேஸ்ட அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் தமது அனுதாபங்களை வெளியிட்டுள்ள வருகின்றனர்.




