மின் கட்டணங்களை அதிகரிப்பது கட்டாயம்:பொது பயன்பாட்டு ஆணைக்குழு
கட்டாயம் நாட்டில் மின்சார கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு (Public Utilities Commission) தெரிவித்துள்ளது.
மின்சார உற்பத்திக்கான செலவுகள் தற்போது அதிகரித்துள்ளதாலும் மின்சார சபை நீண்டகாலமாக நஷ்டத்தில் இயங்கி வருவதாலும் மின்சார கட்டணங்களை அதிகரித்தாக வேண்டும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க (Janaka Rathnayake) கூறியுள்ளார்.
தற்போது மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றாலும் மக்கள் மின் உபகரண பயன்படுத்தல்களை குறைத்து, மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க உதவ வேண்டும் என கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த கோரிக்கைக்கு மக்கள் பெரியளவில் சாதகமான பதிலை வழங்குவார் என எதிர்பார்க்கவில்லை எனவும் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.



