மண்டைதீவு மனிதப் புதைகுழி : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
தீவகத்தில் 1991இல் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டை தீவுப் பகுதியில் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டு, அவர்களின் சடலங்கள் அங்குள்ள தேவாலயக் காணியின் கிணறு உட்பட மூன்று கிணறுகளில் போட்டு மூடப்பட்டன என்று கூறப்படுவது தொடர்பில் விசாரித்து, அந்தக் கிணறுகளைச் சட்டரீதியாக அகழ்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கு றேந்று(17) ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட கிணறுகளை
யாழ். குடாநாட்டின் தீவகப் பகுதியைப் படையினர் கைப்பற்றியபோது படையினரும் ஓர் ஒட்டுக் குழுவும் இணைந்து பலரைக் கைது செய்து, சுட்டுக் கொன்று, மண்டைதீவின் தேவாலயக் கிணறு உட்பட 3 இடங்களில் உள்ள கிணறுகளில் போட்டு மூடினர் எனக் கண் கண்ட சாட்சிகளின் அடிப்படையில் சில மத குருமாரும் இணைந்து இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.
அடையாளம் காணப்பட்ட கிணறுகளை அகழ உத்தரவிடக் கோரியே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன் போது ஊர்காவற்துறை பொலிஸாரிடம் அகழ்வு பணியை மேற்கொள்வதற்கான வசதிகள் இல்லை என சுட்டிக்காட்டியதை அடுத்து யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் குறித்த வழக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த மண்டைதீவு புதைகுழி விவகாரம் தொடர்பாக அறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டார். குறித்த வழக்கு தொடர்பாக பொலிஸார் கால அவகாசம் கோரியதால் எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
