வத்திராயன் கடலில் காயங்களுடன் உயிருக்கு போராடிய நபர்! வைத்தியசாலையில் அனுமதி
யாழ்ப்பாணம்(Jaffna) வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்பகுதியில் இன்று(25) காலை தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில், வத்திராயன் பகுதியை சேர்ந்த மத்தியாஸ் வின்சன் பெனடிட் என்பவரே பாதிக்கப்பட்டுள்ளார்.
உயிருக்கு போராடிய நபர்
கடலில் கடற்றொழிலில் நடவடிக்கைககளில் ஈடுப்பட்டிருந்துக்கொண்டிருந்த போது இன்னொரு படகில் வந்தவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, மத்தியாஸ் வின்சன் பெனடிட் என்பவரின் வலைகள் கடலில் அறுத்தெறியப்பட்டு படகின் மீது மூன்று தடவைகள் மற்றுமொரு படகால் மோதி தூக்கி எறியப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கடலில் உயிருக்கு போராடிய நிலையில் அவருடன் தொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளரால் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியசாலையில் அனுமதி
இந்நிலையில், காயங்களுடன் மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகள் இடம்பெற்றுவருதுடன் மருதங்கேணி பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவரை, பார்வையிடுவதற்காக ஊடகவியலாளர்கள் சென்றவேளை அதற்கான அனுமதி கடமையில் இருந்த வைத்தியரால் மறுக்கப்பட்டதுடன் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவருக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |