நாயை சித்திரவதை செய்தவருக்கு விளக்கமறியல்
நானுஓயாவில் நாய் ஒன்றினை சித்திரவதை செய்து தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை எதிர்வரும் (10) திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
நானுஓயா எடின்பரோ தோட்டத்தில் வளர்ப்பு நாய் ஒன்றினை கொடூரமாக தடியில் துரத்தி, துரத்தி தாக்கி, நடு வீதியில் தரதரவென இழுத்து பின்னர் ஆற்றில் வீசிய சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேற்கொண்ட விரிவான விசாரணையின் பின்னர் சந்தேகநபர் நேற்று முன்தினம் (28) கைது செய்யப்பட்டு நானுஓயா நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நேற்றைய (29) தினம் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
இதனை தொடர்ந்து, சந்தேகத்திற்குரியவரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் (10) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நானுஓயா எடின்பரோ தோட்டத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மோகனசுந்தரம் லக்ஷான் என பொலிஸார் தெரிவித்தனர்.
நாயினை சித்திரவதை செய்யும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறதும் குறிப்பிடத்தக்கது . சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.









ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 12 மணி நேரம் முன்

Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri
