ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்தவர் கைது
கடந்த ஜூலை மாதம் 9ம் திகதி கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்து ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த நபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் தெரணியகலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 28 வயதுடைய சமன்புரகம பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், சந்தேகநபர் நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த மாதம் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றில் அத்துமீறி பிரவேசித்த பலரும் தற்போது கைது செய்யப்படுகின்றர்.
எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக பலரும் கருத்து வெளியட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam