பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்! இளைஞர் பரிதாப மரணம்
கடுவன- புவகஸ்சார பாலத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்றையதினம்(17.5.2026) இடம்பெற்றுள்ளது.
கடுவன - புவகஸ்சார பிரதான வீதியில் பயணித்த தனியாருக்குச் சொந்தமான பயணிகள் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளாகின.
சாரதி கைது
இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

விபத்து இடம்பெறுவதற்கு பேருந்தின் அதிவேகம் காரணமா அல்லது கவனக்குறைவா என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam