தனிப்பட்ட தகராறினால் பேலியகொடையில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை
பேலியகொடை - மீகஹவத்த பகுதியில் கத்தியால் குத்தி ஆண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(19) இடம்பெற்றது.
மண்சரிவில் சிக்கிய ஆலயத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட இரத்தினக்கலால் பரபரப்பு! ஆர்வமுடன் பார்வையிடும் மக்கள்
மேலதிக விசாரணை
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாகக் கத்திக் குத்தில் ஒருவர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

உயிரிழந்தவர் வத்தளை - ஒலியமுல்ல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவராவார்.
இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
புறாக்கள் தொடர்பான தகராறில் இந்தக் கொலை இடம்பெற்றது என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்தது.
இது தொடர்பில் பேலியகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.