பிரித்தானியாவில் கத்திக்குத்துக்கு இலக்கான ஆண் : பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
பிரித்தானியாவின்(United Kingdom) லீவர்பூலின் நகர மையத்தில் ஆண் ஒருவர் கத்திக்குத்து காயங்களுக்கு இலக்கான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
குறித்த சம்பவமானது நேற்று(22) சர்ச் ஸ்ட்ரீட்டில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீவிர விசாரணை
மேலும், உடனடியாக அவர் காயங்களுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர் பிளேடட் ஆயுதம்(bladed weapon) கொண்டு தாக்கப்பட்டு இருப்பதாகவும் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தாக்குதல்தாரி கைது செய்வது தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக பொலிஸார் அப்பகுதியில் உள்ள சிசி ரீவி காட்சிகளை ஆராய்ந்து வருவதோடு, மேலும் கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக விவரம் தெரிந்தவர்கள் உடனே தகவல் வழங்க முன்வருமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தலைமை பொலிஸ் அதிகாரி இது குறித்து பேசிய போது, தங்கள் தெருக்களில் கத்திக்குத்து போன்ற வன்முறைக்கு இடமில்லை என்றும், சம்பவம் குறித்த விவரம் அறிந்தவர்கள் விசாரணைக்கு முன்வருமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.