ஜெர்மனியில் குழப்ப நிலை! யூதர்களை நினைவுகூரும் இடத்திற்கு அருகில் கொடூர சம்பவம்
ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் உள்ள ஹோலோகோஸ்ட் நினைவிடத்தில் வைத்து ஆணொருவர் கத்திகுத்துக்கு இலக்காகியுள்ளார்.
6 மில்லியன் யூதர்களின் மரணத்தை நினைவுகூரும் ஹோலோகோஸ்ட் நினைவிடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை அப்பகுதியில் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இதன்போது, தாக்குதலுக்கு இலக்கான ஆண், படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இதேவேளை, ஜெர்மனியில் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இவ்வாறு கத்திக்குத்து சம்பவமொன்று ஏற்பட்டுள்ளமை நாட்டு மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது.
Police in Berlin are searching city for a suspect who attacked another man inside the Holocaust Memorial around 6pm. The injured man is being treated for non life threatening stab wounds. Motive unknown. Fire truck helping to light crime scene pic.twitter.com/LP7KQN4jPZ
— Redmond Shannon (@RedShannon) February 21, 2025
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |