கொழும்பில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய தொழிலதிபர் கைது
கொழும்பின் புறநகர் பகுதியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலங்கம, உரணாவ, தலவத்துகொட சந்திப்பில், பிராடோ ரக வாகனத்தை முந்திச் செல்ல இடமளிக்காததால் துப்பாக்கியை காட்டி வாகன ஓட்டி ஒருவரை மிரட்டியதற்காக, தொழிலதிபரான பிராடோ ஓட்டுநரே கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்த 9 மில்லி மீற்றர் உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தொழிலதிபர் கைது
நுகேகொட, மஹாசென் மாவத்தையிலிருந்து தலவத்துகொட நோக்கி ஒருவர் தனது மோட்டார் வாகனத்தில் பயணித்தபோது, சந்தேக நபர் பிராடோ ஜீப்பில் பின்னால் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிராடோ வாகன ஓட்டுநர் பல சந்தர்ப்பங்களில் மோட்டார் வாகனத்தை முந்திச் செல்ல முயன்றுள்ளார். ஆனால் வாய்ப்பு இல்லாததால், அவர் கோபமடைந்து தலவத்துகொட சந்திக்கு அருகில் ஜீப்பை நிறுத்தினார்.
துப்பாக்கி பறிமுதல்
பிராடோ ஓட்டுநர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை காட்டி வாகன ஓட்டியை மிரட்டியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகன ஓட்டுநர் முறைப்பாட்டின் பேரில், பிராடோ வாகனத்தின் ஓட்டுநர் துப்பாக்கியுடன் பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 21 மணி நேரம் முன்

சரியான சாப்பாடு இல்லாமல் கிழிந்த உடையுடன்.., மாணவர்கள் முன்பு கிரிக்கெட் வீரர் நடராஜன் எமோஷனல் News Lankasri

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam
