மருதமுனை கடற்கரையில் சிக்கிய இளைஞனுக்கு விளக்கமறியல்
நீண்ட காலமாக பாடசாலை மாணவர்கள் உட்பட இளைஞர்களுக்கு போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ஆலா என்ற இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை (Kalmunai) நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (04) அம்பாறை (Ampara) - பெரியநீலாவணை பொலிஸ் குழுவினர் மருதமுனை கடற்கரை பிரதேசத்தில் சிவில் உடையில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த நடவடிக்கையின் போது, 39 வயதுடைய ஆலா எனப்படும் முஹம்மது இஸ்மாயில் அஸ்மீர் என்ற இளைஞனை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.
சட்ட நடவடிக்கை
இதன்போது, இளைஞனின் உடமையில் இருந்து 11 கிராம் 300 மில்லி கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன் பின்னர், கைதான இளைஞன் நேற்று (5) சட்ட நடவடிக்கைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட வேளை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சந்தேக நபர் இரண்டாவது தடவையாக போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதாகி உள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அதேவேளை, 22 வயதுடைய மற்றுமொரு இளைஞன் கடந்த புதன்கிழமை (3) போதை மாத்திரைகளுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |