வவுனியாவில் மாணவர்களை இலக்கு வைத்து சூசகமான முறையில் போதைப்பொருள் விற்பனை
வவுனியா நகரப்பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மேற்கொண்ட நடவடிக்கையில் நேற்று (30.08.2026) குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள லேகியம் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டு, அங்கு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது கஞ்சா கலந்ததாக சந்தேகிக்கப்படும் 400ற்கும் மேற்ப்பட்ட லேகியப் பொதிகள் கைப்பற்றப்பட்டதுடன் வியாபார நிலையத்தில் கடமையாற்றிய 20 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த லேகியம் வவுனியா நகரை அண்டிய பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து, விற்பனை நிலையத்தின் உரிமையாளரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan