உயிரிழக்கும் வேளையில் பலரை உயிர் வாழ வைத்துள்ள நபர்
ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் மூளைச்சாவு அடைந்த நபரின் உறுப்புகளை வெற்றிகரமாக வேறு நோயாளர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
உயிரிழந்த நோயாளியிடமிருந்து அகற்றப்பட்ட இரண்டு சிறுநீரகங்கள் மற்ற இரண்டு நோயாளிகளுக்கு சத்திர சிகிச்சை மூலம் மாற்றப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மூளையில் ரத்தக்கசிவு
நோயாளிக்கு சி.டி ஸ்கேன் செய்து பார்த்ததில் மூளையில் ரத்தக்கசிவு இருப்பது கண்டறியப்பட்டது.

அதற்கமைய, மூளைச் சத்திரசிகிச்சையின் பின்னர் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சில நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
குறித்த நோயாளியின் மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாகவே மூளை செயலிழந்துள்ளதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியதை அடுத்து, நோயாளியின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்ததாக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் அயந்தி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
தீவிர சிகிச்சை
மூளைச்சாவு அடைந்த நோயாளியின் மற்ற முக்கிய உறுப்புகளும் மெதுவாக இறந்து வருவதாகவும், அறுவை சிகிச்சை மூலம் உறுப்புகளை விரைவில் அகற்றினால் மேலும் 8 பேரின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்றும் உறவினர்களிடம் மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

இதன்படி மூளைச்சாவு அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள இந்த நோயாளியின் மனைவி மற்றும் உறவினர்களின் அனுமதியின்படி இரண்டு சிறுநீரகங்களும் எடுக்கப்படுகின்றன.
நோயாளியின் உறவினர்களின் உடனடி முடிவு மற்றும் ஆதரவின்படி, மூளைச்சாவு அடைந்த நோயாளியின் சிறுநீரகத்திற்கான சிறப்பு அறுவை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
இதயம், கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல், குடல், கணையம், எலும்புகள், தோல் மற்றும் கண்கள் போன்ற உறுப்புகளை மாற்ற முடியும், மேலும் அந்த உறுப்புகளை மாற்றுவதன் மூலம், மேலும் எட்டு உயிர்களை காப்பாற்ற முடியும் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் வைத்தியர் அயந்தி ஜயவர்தன குறிப்பிட்டார்.
அதற்கமைய, ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் மூலம் நோயாளியிடமிருந்து இரண்டு சிறுநீரகங்கள் மாத்திரம் எடுக்கப்பட்டு, மேலும் இரண்டு நோயாளிகளுக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan