தலையில் இரத்த காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு
களுத்துறையில் தலையில் இரத்தக் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
களுத்துறை, கட்டுகுருந்த கடற்கரை பகுதியில் இருந்து இன்று(30.08.2025) சனிக்கிழமை இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடற்கரைப் பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதாக 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்குக் கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
55 முதல் 60 வயது மதிக்கத்தக்க நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது கொலையாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri
