சுதந்திரமாக வாழ விரும்பி ஆடையின்றி உந்துருளியில் பயணித்த இளைஞர்..!
ஆடையின்றிய நிலையில், உந்துருளியில் பயணம் செய்தமைக்காக கைது செய்யப்பட்ட இளைஞர், தாம் சுதந்திரமாக வாழ விரும்புவதால் தனது ஆடைகளை கழற்றியதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தனது எப்பிள் போனை வழியில் வீசி எறிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
பொதுமக்களின் எதிர்வினை
நேற்று அஹங்கமவில் உள்ள ஒரு விருந்தகம் ஒன்றில் இருந்து புறப்பட்ட அவர், பிதுருதலாகல மலைக்கு செல்ல விரும்பியதாக, விசாரணையின் போது குறிப்பிட்டுள்ளார்.
தாம் உந்துருளியில் செல்லும்போது, அவ்வப்போது ஆடைகளை கழற்றி எறிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தனது செயல்களுக்கு பொதுமக்களின் எதிர்வினையையும் கவனிக்க விரும்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொலிஸாரால் கைது
கொழும்பு-கண்டி வீதியில் நிர்வாண நிலையில் உந்துருளியை செலுத்திச் சென்ற அஹங்கமவைச் சேர்ந்த 23 வயதுடைய, இந்த இளைஞரை கடுகன்னாவ பொலிஸார் கைது செய்தனர்.
இடையில் பல்வேறு பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸார் அவரைக் கைது செய்ய துரத்தினர், ஆனால் அவர் தனது அதிக இயந்திர திறன் கொண்ட உந்துருளியில் வேகமாகச் சென்றதால், அவரை கைது செய்ய முடியவில்லை. இருப்பினும், கடுகன்னாவ பொலிஸாரால், வீதித் தடையை ஏற்படுத்தி அவரைப் பிடிக்க முடிந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நடிகையுடன் கிசுகிசு.. உண்மையான மனைவி போட்டோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் ஸ்டாலின் Cineulagam

நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு- இதெல்லாம் நடக்க காரணம் இவர்தானா? Manithan
