கிளிநொச்சியில் ஜேவிபி மாநாட்டை எதிர்த்து தனிநபர் போராட்டம்
கிளிநொச்சியில் நடைபெறும் ஜேவிபி மாநாட்டை எதிர்த்து தனிநபர் ஒருவர் போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றார்.
குறித்த போராட்டமானது, இன்றையதினம் (16.03.2024) கிளிநொச்சியில் ஜேவிபி மாநாடு நடைபெறும் மண்டபத்திற்கு எதிரே, முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகம் ஜீவராஜால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர் ஏந்தியுள்ள பதாதைகளில் 'இணைந்த வடக்கு கிழக்கை நீதிமன்றம் வரை சென்று பிரித்த பெருமை ஜேவிபியையே சாரும்' மற்றும் 'சொந்த இனத்தையே அழித்த ஜேவிபி எங்கள் இனத்துக்கு எவ்வாறு தீர்வு தரும்' போன்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
நெற்றியில் கருப்புப்பட்டி
மேலும், போராட்டத்தை நடாத்தி வரும் நபர் நெற்றியில் கருப்புப்பட்டி அணிந்து ஜேவிபிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - எரிமலை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |