புதுக்குடியிருப்பில் வீதியை உழவியந்திரத்தினால் உழுதமையினால் அமைதியின்மை..!
முல்லைதீவு- கைவேலி பகுதியில் அரசுக்கு சொந்தமான வீதியை தனிநபர் ஒருவர் உழவியந்திரத்தினால் உழுததனையடுத்து அந்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(24) இடம்பெற்றுள்ளது.
முரண்பாடு
கைவேலி கிராமத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினருக்கு சொந்தமான ஆத்திப்புலவு ,கிருஷ்ணர் வீதியினை கைவேலி கிராம அபிவிருத்தி சங்க தலைவர் 75 மீற்றருக்கு மேற்பட்ட வீதியினை உழவியந்திரத்தினால் உழுதுள்ளார்.
இதனால் கிராம மக்களிற்கும், குறித்த கிராம அபிவிருத்தி சங்க தலைவருக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து கிராம மக்களால் புதுக்குடியிருப்பு பொலிஸ் மற்றும் பிரதேச சபைக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
அதனையடுத்து புதுக்குடியிருப்பு பிரதேசசபை செயலாளர் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று வீதியினை பார்வையிட்டுள்ளார்.
குறித்த கிராம மக்களிடம் இவ்விடயம் தொடர்பில் எழுத்து மூலமான கடிதத்தினை பிரதேச சபைக்கு தருமாறும் அதற்குரிய சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் குறித்த வீதியை சீர் செய்து தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
