விசாரணைக்காக பொலிஸ் புலனாய்வாளர்களால் அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் மீது தாக்குதல்
பொலிஸ் புலனாய்வாளர்கள் என்று தம்மை அறிமுகம் செய்ததுடன், பொலிஸ் என்று எழுதப்பட்ட மேலங்கியும் அணிந்திருந்த நால்வரால் விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் படுகாயங்களுடன் பளை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
பலாத்காரமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற அவர்கள் தம் மீது தாக்குதல் நடத்திவிட்டு இடையில் இறக்கி விட்டுச் சென்றனர் என்று பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பளை - வண்ணான்கேணியைச் சேர்ந்த சிறீதரன் காந்தன் என்ற குடும்பஸ்தரே புலனாய்வாளர்கள் என்று கூறப்படுவோரால் கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தலைமறைவானவர் தொடர்பில் தகவல் அளிக்க வருமாறு
இந்தச் சம்பவம் குறித்து மேலும் அறியவருவதாவது, பாதிக்கப்பட்ட நபரின் நண்பர் ஒருவர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
அவர் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் விசாரணைக்குச் செல்லாமல் தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகின்றது.
இந்தநிலையில், தலைமறைவானவர் தொடர்பில் தகவல் அளிக்க வருமாறு பாதிக்கப்பட்டவரிடம் தம்மைப் புலனாய்வாளர்கள் என்று அறிமுகம் செய்த - பொலிஸ் என்று அடையாளமிடப்பட்ட மேலங்கி அணிந்த நால்வர் அழைத்துள்ளனர்.
இதற்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில ஏற்றிச் சென்ற நால்வரும் அவரைத் தாக்கி இடையில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர் என்று பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார்.
பளை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நபரிடம் பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan
